Rtn. Subapriya K அவர்கள் தலைமையில் நடைபெற்ற யோகா மற்றும் நலவாழ்வு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்தது.
மூச்சுப் பயிற்சிகள், கண்களுக்கான பயிற்சிகள் மற்றும் உடலுக்குத் தேவையான எளிய யோகாசனங்கள் என அனைவருக்கும் புரியும் வகையில், ஆர்வத்துடன் பங்கேற்கும் விதத்தில் பயிற்சிகளை வழங்கினார்.
தினசரி உழைப்புக்கு இடையே தங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அழகாக எடுத்துரைத்தார்.
இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை வழங்கிய Rtn. Subapriya K அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

