காமராஜர் பிறந்த தின விழா

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் நேஷனல் பள்ளி இணைந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15 ஆம் நாள் பள்ளி குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கினோம்.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

ஆசை மகள் தாய் சேய் நலம் – 1.0 & 2.0

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

“இன்பம் துன்பம் எது வந்த போதிலும் தன் அருகில் வைத்து அனைத்து கொள்கிறது தாய்மை”

வாகை ஆண்டின் முதல் மாவட்ட செயல்திட்டம் ஆசை மகள் தாய் சேய் நலம் – 1.0 ஜூலை மாதம் 9-ம் நாள் காலை 10 மணி முதல் 11 மணி வரை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக Rtn.Dr. பாரதி கார்த்திகா அவர்கள் தாய் சேய் நலம் பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவ்விழாவில் Rtn. மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் அவர்கள் கலந்துகொண்டு கௌரவித்துக் கொடுத்தார். இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் வழங்கினோம்.

“பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை”

வாகை ஆண்டின் இரண்டாவது மாவட்ட செயல் திட்டம் “ஆசை மகள் சமுதாய வளைகாப்பு – 2.0” ஜூலை மாதம் 9-ம் நாள் காலை 10 மணியளவில் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 60 நபர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினோம்.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
Rtn. யாஸ்மின் சர்தார்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – ஆசை மகள் (2024-2025)
Rtn. பிரதீபா பரமசிவம்
திட்ட தலைவர் (2024-2025)

ரோட்டரிகிளப்ஆப்கரூர்ஏஞ்சல்ஸ்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

16th Installation Ceremony

16ஆம் பணியேற்பு விழா
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

“எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணல் வேண்டும்”

✨ஏஞ்சல்ஸ் சங்கத்தின் 16 வது பணியேற்பு விழா ஜூலை 1ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஸ்ரீ முருகன் ரெசிடென்சியில் Rtn வாகை ஆண்டின் மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி அவர்களின் வழிகாட்டுதலில் படி சிறப்பு விருந்தினர் Rtn. மாவட்ட ஆளுநர் தேர்வு கார்த்திக் அவர்கள் மற்றும் கௌரவ விருந்தினர் Rtn. முன்னாள் மாவட்ட ஆளுநர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. Rtn.மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் அவர்கள் மற்றும் Rtn.துணை ஆளுநர் கவிதா ராமமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் புதிய மூன்று மருத்துவ உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவ்விழாவில் அனைத்து கரூர் மாவட்ட ரோட்டரி சங்க நண்பர்கள் மற்றும் ஏஞ்சல்ஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

ரோட்டரிகிளப்ஆப்கரூர்ஏஞ்சல்ஸ்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

Free Breast Cancer Screening & Pep smear test Camp – Day 1

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

✨ வாகை ஆண்டின் முதல் நிகழ்வாக எங்களது தொடர் செயல்திட்டமாக ஜூலை மாதம் 1-ம் நாள் கரூர் டெக்பார்க்ல் 19 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் 18 நபர்களுக்கு கருப்பை வாயுள் புற்றுநோய் கண்டறியும் முகாம் Rtn.DGE. கார்த்திக் & Rtn.PDG. கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.

Free Breast Cancer Screening & Pepsmear test Camp – Day 2
“விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்”

✨ வாகை ஆண்டின் முதல் நிகழ்வாக எங்களது தொடர் செயல்திட்டமாக ஜூலை மாதம் 2-ம் நாள் கரூர் டெக்பார்க்ல் 30 நபர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் 26 நபர்களுக்கு கருப்பை வாயுள் புற்றுநோய் கண்டறியும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)
Rtn.நீலாவதி கோபாலகிருஷ்ணன்
திட்ட தலைவர் (2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000