சுதந்திர தின விழா 15.08.2024

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

“நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம் எதிர்கால சந்ததியினருக்காக அதை பாதுகாப்பதை உறுதி செய்வோம் சுதந்திர தின வாழ்த்துக்கள்”

ஆகஸ்ட் 15 ஆம் நாள் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கம் கரூர் பாலர் கலைக் கூடத்தில் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சில போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்புற நடத்தினர்.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

2006 மரக்கன்றுகள் வழங்கும் விழா – 11.08.2024

பசுமை காப்போம்
இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!
🌱 “பசுமை காப்போம்”🌱

கடவுள் எப்படி இருப்பார்?
‘ என்று கேட்கையில்,
தேவாரப் பாடல் ஒன்று…
‘கோடை காலத்தில் வெயிலின்
கொடுமை தாளாமல் வந்து நிற்பவனுக்கு மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி போன்றதே கடவுள்”
என்று சொல்கிறது எனில்,
ஒவ்வொரு மரமும் ஒரு வகையில் கடவுள்தான்

தேதி :11.08.24
இடம்: பசுபதீஸ்வரர் கோயில் கரூர்.

🙏🏻26 வது ஆடி தெய்வத் திருமண பெரு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு “2006 மரக்கன்றுகள் வழங்கும் விழா” நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக Rtn மீனா சுப்பையா Darshan group of school கரூர்கலந்து கொண்டு மரக்கன்றுகளை மக்களிடம் கொடுத்தார்.மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்

இதில்
  • வேங்கை மரம்
  • செம்மரம்
  • மஞ்சள் கடம்பு மரம்
  • நாவல் மரம்
  • பிள்ளை மருது மரம்
  • இலுப்பை மரம்
  • புன்னை மரம்

ஏழு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

Kitchen Products Distribution -05.08.2024

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

ஆகஸ்ட் 5 ஆம் நாள் எங்கள் சங்கத்தின் சார்பாக CSI பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சமையலறை பொருட்கள் (Grinder) வழங்கினோம். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வாகை ஆண்டின் மாவட்ட ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்களும் மாவட்ட முதல் பெண்மணி ஆஷா ராஜா கோவிந்தசாமி அவர்களும் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். இவ்விழாவிற்கு கௌரவ விருந்தினராக PDG Rtn ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000

கரூர் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து வாஷிங் மெஷின் வழங்கும் விழா – 05.08.2024

இனிய ரோட்டரி வணக்கங்கள் 🙏🏻💐!!!

ஆகஸ்ட் 5 ஆம் நாள் கரூர் கஸ்தூரிபாய் தாய் செய்நல விடுதிக்கு கரூர் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து வாஷிங் மெஷின் வழங்கினோம். இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக மாவட்ட ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்களும் மாவட்ட முதல் பெண்மணி Rtn ஆஷா ராஜா கோவிந்தசாமி அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர். இவ்விழா மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn ராம்குமார் அவர்கள் மற்றும் ஆசை மகள் தாய் செய் நலத்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn யாஸ்மின் சர்தார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இங்ஙனம்,
Rtn. கலைச்செல்வி நாகராஜ்
தலைவர்(2024-2025)
Rtn. கவிதா ராஜ்குமார்
செயலாளர்(2024-2025)

கரூர்ஏஞ்சல்ஸ்ரோட்டரி_சங்கம்

வாகை_ஆண்டு_2024-25

மாவட்டம்_3000