மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம்
கரூர் ரோட்டரி சங்கம், Rotary Club of Karur Angels மற்றும் கரூர் காஸ்ட்ரோ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாமில் நானும் நமது சங்கத் தலைவர் Rtn. சங்கீதா ரவி அவர்களும் கலந்துகொண்டோம்.
சுமார் 350 பெண்கள் பயனடையும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனை பெறுவதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.
இந்த முகாமில் மருத்துவ ஆலோசனையும் விழிப்புணர்வும் வழங்கிய மருத்துவர்கள்,
Dr. S. சதாசிவம்
Consultant Surgical Gastroenterologist
Dr. அக்ஷர் அரவிந்த்
Surgical Oncologist
ஆகிய இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.



